Friday, 29 December 2023

நீர்ச்சுழி / வேர்ல்பூல் விண்மீன் திரள் | Whirlpool Galaxy

 

மெஸ்ஸியர் 51 (M51, NGC 5194) என்று அறியப்படும் நீர்ச்சுழி / வேர்ல்பூல் விண்மீன் மண்டலம் Big Dipper தொகுதிக்கு அருகிலுள்ள 'கேன்ஸ் வெனாடிசியில்' உள்ள சுழல் விண்மீன் திரள்களில் (Spiral Galaxy) ஒன்றாகும். M51 இதனருகில் உள்ள NGC 5195 உடன் தொடர்பு கொள்கிறது. இவ்விரண்டு விண்மீன் திரள்களும் வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை. ஒளியற்ற இருண்ட வாானில் திறன்மிக்க தொலைநோக்கியில் பாார்க்கலாம்.
சார்லஸ் மெஸ்ஸியர் 1773 ஆம் ஆண்டில் எம் 51 னைக் கண்டுபிடித்தார், மேலும் இது "நட்சத்திரங்கள் இல்லாத மிகவும் மங்கலான நெபுலா" என்றும் விவரித்திருந்தார். பின்னர், இவரது நண்பர் பியர் மெச்செய்ன் மார்ச் 1781 இல் அதன் அருகிலுள்ள விண்மீன் திரளான NGC 5195 யைக் கண்டுபிடித்தார். மெஸ்ஸியரின் பட்டியலில் இவை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன. "இவை இரட்டையாகும், ஒவ்வொன்றும் ஒரு பிரகாசமான மையத்தைக் கொண்டுள்ளன, இவை 4' 35" பாகை தொலைவில் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு வளிமண்டலங்களும் ஒன்றையொன்று தொடுகின்றன, ஒன்று மற்றொன்றை விட மங்கலானது". NGC 5195 சில நேரங்களில் M 51B எனவும் குறிப்பிடப்படுகிறது.
லார்ட் ரோஸ் அயர்லாந்தின் பார்சன்ஸ்டவுனில் தனது ஆறு அடி பிரதிபலிப்பு தொலைநோக்கி மூலம் இதைக் கண்டு இதன் துல்லியமான ஓவியத்தை வரைந்தார். எனவேதான் M51 சில நேரங்களில் 'ரோஸ்ஸின் கேலக்ஸி' அல்லது 'லார்ட் ரோஸின் கேள்வி குறி' என்றும் குறிப்பிடப்படுகிறது.
எம் 51 மற்றும் என்ஜிசி 5195 க்கு இடையில் ஒரு "தொடர்புப் பாலம்" காணப்படுகிறது. M 51 இல் இதுவரை SN 1994I, SN 2005cs என்ற இரண்டு சூப்பர்நோவாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ZWO ASI 533
STAR ADVENTURER ED 72
STAR ADVENTURER TRACKER
ZWO ASI 210 MMS GUIDE SCOPE
97 X 2 MINS, DARKS, FLATS
SIRIL, PS
- பாலா பாரதி
All reactions:
Bala Murali, Rajagopal Venkatachalam and 69 others

No comments:

Post a Comment