Friday, 29 December 2023

வெள்ளி கோள்மறைப்பு | Occultation of Venus

 ஒரு கோளுக்கு முன்பாக நிலவு வரும்போது அக்கோள் நிலவால் மறைக்கப்படும் நிகழ்வு கோள்மறைப்பு எனப்படும். மார்ச் 24, 2023 மாலை வெள்ளிக் கோளை நிலவு மறைக்க இருக்கிறது. வானியல் ஆய்வில் முக்கியமாகக் கருதப்படும் கோள்மறைப்பிலிருந்து பல தகவல்கள் பெறப்படும். வெள்ளிக்கோளை நிலவு மறைக்கும் வேளையில் வெள்ளியிலிருந்து வரும் ஒளி அளக்கப்படும். பெறப்படும் ஒளியின் அளவு வேறுபாடுகளிலிருந்து வெள்ளி மேற்பரப்பின் வலிமண்டல அடர்த்தி, அளவு போன்றவை அளக்கப்படும். இம்மறைப்பைத் தமிழ்நாட்டிலிருந்து பார்க்கலாம். ஆனால், சூரியனின் ஒளியினால் சற்றுக் கடினமாக இருக்கலாம். சூரியன் மறையும் வேளையில் நிலவு அதன் மூன்றாம் பிறையில் மேற்கே சூரியனுக்கு மேலே இருக்கும். மாலை 4:10 மணிக்கு நிலவின் மேல்பக்கத்தில் வெள்ளி நுழைய ஆரம்பிக்கும். சற்று நேரத்தில் முற்றிலும் மறைந்து மீண்டும் 5:30 மணிக்கு கீழ் பகுதியில் வெளிவரும். | March 24, 2023

- பாலா பாரதி
All reactions:
Francis Edison, அன்பு வந்தியத்தேவன் and 38 others

No comments:

Post a Comment