பொதுவாக பகல் நேரமும் இரவு நேரமும் சமமாக இருப்பதில்லை. குளிர்காலங்களில் இரவுப்பொழுது சற்று நீண்டிருப்பதையும், கோடையில் பகல் சற்று நீண்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள். சூரியன் உதிக்கும் புள்ளி ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே வரும். ஒர் ஆண்டு முழுவதும் சூரியன் உதிக்கும் புள்ளிகளை எடுத்துக்கொண்டால் அப்புள்ளிகள் இட, வலமாக நகர்வதைக் காணலாம். ஒர் ஆண்டில் இரு நாட்கள் சூரியன் சரியான கிழக்கில் உதிக்கும். அவ்விரு நாட்களில் பகலும் இரவும் சமமாக இருக்கும். இந்த நாட்கள் பகலிரவுசம நாட்கள் (Equinox) என்கிறோம். பகலும் இரவும் சமமாக இருக்கும் நாளிலிருந்து அதாவது சூரியன் சரியான கிழக்கில் உதித்து நிலநடுக்கோட்டிற்குச் சரியாக நேர்மேலே செல்லும் நாளை முதல் நாளாகக் கொண்டு தமிழர்கள் ஆண்டைக் கணக்கிட்டனர். சமநோக்கு புள்ளிகளைப் போல் இடது, வலது ஓரமாக இருக்கும் இரண்டு புள்ளிகள் கதிர் திரும்பும் புள்ளிகள் (Solestice) என அழைக்கப்படுகின்றன. இப்புள்ளிகள் வரை செல்லும் சூரியன் மறுபடியும் திசைத் திரும்பும் புள்ளிகளாகும். சித்திரை முதல்நாளன்று சமநோக்கு நாளாக இருந்தபோது கதிர் திரும்பும் புள்ளிகள் தை 1 மற்றும் ஆடி 1 ஆக இருந்துள்ளன. இடது ஓரத்தில் ஆடி 1, வலது ஓரத்தில் தை 1 என இருந்தது. தை 1 அன்று வலதுகோடியில் உதிக்கும் சூரியன் அடுத்த நாள் அதாவது தை 2 அன்று சற்று இடதுபுறம் தள்ளி உதிக்கும். இப்படி தினமும் உதிக்கும் புள்ளி நகர்ந்துக் கொண்டே வருவதைத்தான் வடசெலவு (உத்திராயணம்) என்கிறோம். சித்திரை 1 அன்று நடுவில் வந்து, மேலும் வடக்கே பயணித்து ஆனி மாதம் 30 ஆம் தேதி அன்று வடசெலவை முடித்துக்கொள்ளும். அடுத்த நாள் அதாவது ஆடி 1 அன்று தெற்கிலிருந்து வடக்கே தனது பயணத்தைத் தொடரும். இதுவே தென் செலவு (தட்சணாயணம்) என்கிறோம். உண்மையில் சூரியன் தெற்கு வடக்காக நகரவில்லை, அது உதிக்கும் புள்ளிகளை ஒரு ஆண்டு முழுவதும் கவனித்தால் அது நகர்ந்ததைப் போலத் தெரியும் பாதையைத்தான் அவ்வாறு கூறுகிறோம்.
BHARATHI MAT HR SEC SCHOOL, INDIAN BANK COLONY, K.K.NAGAR ROAD, TRICHY-21, 0431-2456583, 9944966826.
Friday, 29 December 2023
பகலிரவு சமநாள் | Equinox
ஆனால், 1500 ஆண்டுகளுக்கு முன் கணியர்கள் கணித்ததை எந்த மாற்றமும் இன்றி நாம் பின்பற்றி வருகிறோம். நடைமுறையில் இன்றைய வானியல் இக்கணிப்பிலிருந்து மாறியுள்ளது. தற்காலத்தில் வடசெலவு, தென்செலவு தை 1, ஆடி1 ஆகிய நாட்களில் நடைபெறுவதில்லை. வேறு எந்த நாட்களில் நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ளலாமா? செங்குத்தாக நட்டுவைக்கப்பட்டக் குச்சியின் நிழலைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம் இந்நாட்களை எளிதாக கணக்கிடலாம்.
நமது பள்ளியின் மொட்டைமாடியில் சூரியநகர்வை ஆய்வு செய்யும் நோக்கில் இரும்புக்குச்சி ஒன்று நிரந்தரமாக நடப்பட்டுள்ளது. குச்சியின் நிழல் நகரும் திசையைக் கொண்டு இதை மாணவர்களே கணக்கிட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- பாலா பாரதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment