ஓரையான் உடுக்கணத்தின் நடுவிலுள்ள மூன்று விண்மீன்களைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. மனிதத் தோற்றத்தின் காட்சியளிக்கும் இதன் நடுப்பகுதியில் மூன்று விண்மீன்கள் வரிசையாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவை அல்நிடாக், அல்நிலம், மிண்டாகா என அழைக்கப்படுபவை. பார்ப்பவர்கள் அனைவருக்கும் எளிதாகக் காட்சித்தரும் இம்மூன்று விண்மீன்களில் கிழக்கிலுள்ள அல்நிடாக் விண்மீன் சீட்டா ஓரையானிஸ் (Zeta Orionis) என அழைக்கப்படுகிறது. இதன் அருகே சற்றுத் தெற்கே இருக்கும் புகழ்பெற்ற வான்பொருட்கள் குதிரைத்தலை நெபுலா (Horsehead Nebula) மற்றும் சுடர் நெபுலா ( Flame Nebula). இவை வெறும் கண்களுக்குத் தெரியாது. திறன் மிக்கத் தொலைநோக்கிகளில் சுடர் நெபுலாவை வேண்டுமானால் பார்க்கலாம் ஆனால் குதிரைத் தலை நெபுலா சற்றுக் கடினம். ஏனெனில் அது ஒரு இருள் நெபுலா (Dark Nebula).
BHARATHI MAT HR SEC SCHOOL, INDIAN BANK COLONY, K.K.NAGAR ROAD, TRICHY-21, 0431-2456583, 9944966826.
Friday, 29 December 2023
குதிரைத்தலை நெபுலா | Harse Head Nebula | Flame Nebula | Barnard 33
இதை ஒளிப்படமெடுத்துப் பார்க்கலாம். அதற்குரிய சிறப்புக் கருவிகளுடன் நீண்டநேரம் படமெடுக்கும்போதுத் தெரியும். அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுக்களைக் கொண்ட IC434 எனப் பெயரிடப்பட்டுள் சிவப்பு உமிழ்வு நெபுலாவிலிருந்து வரும் பிரகாசமான ஒளியைத் தடுப்பதால் குதிரைத் தலை வடிவம் நிழல்போல் (Silhouette) தெரிவதைப் பார்கலாம். இது 1375 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
இதனருகே உள்ள சுடர் நெபுலா (Flame Nebula) ஒரு பிரதிபலிப்பு நெபுலா(Emission Nebula) ஆகும். இந்த நெபுலாவின் பிரகாசமானப் பகுதிக்கு முன்னால் இருண்ட வாயு மற்றும் தூசி மண்டலங்கள் உள்ளன. இது Orion Molecular Cloud Complex இன் ஒரு பகுதியாகும். இது குதிரைத் தலை நெபுலாவை உள்ளடக்கிய விண்மீன்களை உருவாக்கும் பகுதியாகும். இதன் நடுவில் புதிதாக உருவான விண்மீன்களின் ஒளியினால் ஒளிர்கிறது. இது 900 இலிருந்து 1500 ஒளியாண்டுகள்வரை பரவியுள்ளது.
- பாலா பாரதி
Image details :
227X60 sec lights
20 darks
Temp -5°
No flats and bias added
Stacked in Siril
Gear detais :
Asi 533 mc pro
Skywatcher 72 ed
Skywatcher tracker
Guided
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment