Friday, 29 December 2023

பெய்லியின் மணிகள் | Baily’s beads

         

                பூமியிலிருந்து நிலவைப் பார்க்கும்போது சரியான வட்டமாகத் தெரிகிறது, ஆனால் அதன் மேற்பரப்பு அவ்வாறு இல்லை. அது மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளது. சூரிய கிரகணத்தின்போது நிலவு சூரியனை மறைக்கிறது அல்லவா? நிலவின் இரண்டாவது , மூன்றாவது தொடுதலின்போது சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இந்த மலைகள், பள்ளத்தாக்குகள் வழியே பாய்ந்து வரும். அப்போது மலைகள் இந்த சூரிய ஒளியைத் தடுக்கும், பள்ளத்தாக்குகள் சூரிய ஒளியை அனுமதிக்கும். இதனால் சூரியனின் மெலிதான விளிம்பில் மணிகள் போன்ற தோற்றம் ஏற்படும். இந்நிகழ்வு சில நொடிகளேத் தோன்றும். இதை 1836 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வானியல் ஆய்வாலர் பிரான்சிஸ் பெய்லி என்பவர் முதன்முதலில் விளக்கினார். எனவே இந்த மணிகள் போன்ற காட்சி 'பெய்லியின் மணிகள்' (Baily’s beads) அல்லது 'பெய்லியின் விளைவு' (Baily’s Effect) என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் நிகழ்ந்த வளைய சூரிய கிரகணத்தின்போது பெய்லியின் மணிகளை நம்மால் படமெடுக்க முடிந்தது. முழு சூரிய கிரகணமாக இருந்தால் இதனுடன் 'வைர மோதிர' (Diamond Ring) காட்சியையும் காணலாம்.

(Baily’s beads, are bright spots seen when light passes through the mountains and valleys of the Sun during total and annular eclipses. They are named after English astronomer Francis Baily who first explained this phenomenon).

Baily’s beads | Manapparai, Tamilnadu | Dec'19, 9:34am | Nickon D750 | Nickor 150-500mm at 500mm| Solar Filter | low iso |1sec single exposure | ps.)
                                                                                                            - பாலா பாரதி
May be an image of eclipse
All reactions:
பா. பாவேந்தன், இரா.விஜயன் and 24 others

No comments:

Post a Comment