ஓரையான் உடுகணத்தின் திசையில் இக்கற்கள் விழுவதால் இவற்றிற்கு ஓரியனாட் கற்கள் பொழிவு (Orionid Shower) என்று பெயர். அக்டோபர் 7 ஆம் தேதியிலிருந்து இப்பொழிவு நடைபெற்று வந்தாலும் இன்றும், நாளையும் அதிக அளவில் நடக்க இருப்பதால் இப்போது பார்க்க வாய்ப்பு அதிகம். நமக்கு ஓரையான் இரவில் கிழக்கே உதித்து விடியற்காலையில் தலைக்கு மேலே தெரியும். இன்றும், நாளையும் காலை சூரியஉதயத்திற்கு முன்பு 4 மணியிலிருந்து 5 மணிவரை பார்ப்பது நன்று. ஒரு மணி நேரத்தில் பத்திலிருந்து இருபது விண்கற்கள் வரை பார்க்கலாம். இடையே நெருப்புப் பந்து ( Fire Ball) பார்க்கவும் வாய்ப்புள்ளது. நடு இரவு முதல் விடியற்காலை வரை ஓரையான் உடுகணத்திலிருந்து விண்கற்கள் எரிந்துகொண்டே விழுவதைக் காணலாம். இந்த கற்கள் ஹேய்லி என்ற வால்நட்சத்திரம் பூமியைக் கடந்தபோது விட்டுச்சென்ற மீதங்கள் ஆகும். இரவு வானினைக் காட்டி விண்கற்கள், விண்மீன் கூட்டங்கள் பற்றிப் பேசி வானியல் மீது குழந்தைக்கு ஈர்ப்பு ஏற்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. குழந்தைகளுடன் கண்டுகளியுங்கள். (படங்கள்:விக்கிபீடியா)
BHARATHI MAT HR SEC SCHOOL, INDIAN BANK COLONY, K.K.NAGAR ROAD, TRICHY-21, 0431-2456583, 9944966826.
Friday, 29 December 2023
ஓரியனாட் கற்கள் பொழிவு | Orionid Shower
- பாலா பாரதி
Orionid Meteor Shower can be seen on October 21 & 22. The Orionid meteor shower will be visible from October 2 to November 7. The shower is expected to peak on early morning of October 22.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment