இன்று (ஜூன் 30) விண்கற்கள் நாள் (ASTEROID DAY) எனவே விண்கற்களைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?
விண்கற்கள் என்றால் என்ன?
விண்கற்கள் என்றால் என்ன?
நமது சூரிய மண்டலத்தின் (SOLAR SYSTEM) செவ்வாய் கோளுக்கும் (MARS) வியாழன் கோளுக்கும் (JUPITER ) இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் (ASTEROIDS) எனப்படுகின்றன.
எரிநட்சத்திரங்கள் அல்லது எரிகற்கள் (SHOOTING STAR) என்பவை யாவை?
இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம். இவை பூமியியின் ஈர்பால் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போது காற்றின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து விடுகின்றன. இப்போது அவற்றை எரிகற்கள் அல்லது எரிநட்சத்திங்கள் என்கிறோம். இவை பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே எhpந்துவிடுவதால் இவற்றால் பூமிக்கு ஆபத்தில்லையென்றாலும், சிலசமயம் முழுவதும் எரிந்துமுடிப்பதற்குள் பூமியில் விழுந்துவிடும். இதுபோன்ற விண்கற்கள் சேகரிக்ப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
விண்கற்கள் எவற்றால் ஆனவை?
மண் பொருளான விண்கற்கள் உலோகப் பொருள்களால் ஆன விண்கற்கள் என இரண்டு வகையான விண்கற்கள் உள்ளன.
மண் பொருளான விண்கற்கள் உலோகப் பொருள்களால் ஆன விண்கற்கள் என இரண்டு வகையான விண்கற்கள் உள்ளன.
விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன?
இக்கேள்வியிலேயே பதில் அடங்கியுள்ளதாகக் கூறலாம். விண்கற்கள் அனைத்துமே விண்ணிலிருந்து தான் வருகின்றன. சொல்லப் போனால் விண்வெளியில் ஒன்றல்ல லட்சக் கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. நெல்லிக்காய் அளவிலான விண்கற்களையும் சேர்த்துக் கொண்டால் கோடானு கோடி விண்கற்கள் உள்ளன எனலாம்.ஆனால் இவை எதுவும் மரத்தில் மாங்காய் தொங்குவதைப் போல பூமிக்கு மேலே வானில் நிலையாக ஓரிடத்தில் இருப்பது இல்லை எல்லா விண்கற்களுமே அதிகமான வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இவை ஏப்போது தோன்றின?
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றிய போதே இந்த விண்கற்களும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த விண்கற்கள் கூட்டத்தில் பல கோடி விண்கற்கள் இருந்திருக்க வேண்டும். கிலப்போக்கில் ஈர்பினால் பல ஒன்று சேர்ந்து கோள்களாக மாறிவிட்டிருக்கின்றன.
இவை என்ன அளவில் இருக்கும்?
விண்கற்கள் சில மீட்டர் நீளத்திலிருந்து பல கிலோமீட்டர்கள் நீளம் வரையிலும் உள்ளன. பொதுவில் பெரிய அளவில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர். இருபது அல்லது முப்பது மீட்டர் நீளமுள்ள விண்கற்கள் அஸ்டிராய்டுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.மாங்காய் சைஸ் அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.
இவை ஏன் பூமியில் விழுகின்றன?
இவை சூரியனைச் சுற்றும்போது செவ்வாய்(Mars), பூமி(Earth), வெள்ளி(Venus), புதன்(Mercury) ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளை குறுக்காகக் கடக்கின்றன. இது ஆளில்லா இரயில்வே கிராசிங்கை வாகனங்கள் கடப்பதற்கு ஒப்பானது.பூமியின் சுற்றுப்பாதையை ஒரு விண்கல் கடக்கும் நேரத்தில் அதற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டராக இருக்குமானால் பிரச்சினை இல்லை. ஆனால் பூமி தனது சுற்றுப்பாதையில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் வழியே விண்கல் கடக்க முயன்றால் பிரச்சினைதான். இரயில்வே கிராசிங்கில் லாரி மீது ரயில் மோதுவது போன்று பூமியின் மீது விண்கல் மோத நேரிடும்.
இவை பூமியில் விழுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?
ஓவ்வொருநாளும் குறைந்தது 20 பவுண்டு எடையுள்ள 3 அல்லது 4 விண்கற்கள் பூமியை நோக்கி வருகின்றன. 1908 ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்கல் ஒன்று மத்திய சைபீரியாவில் விழுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அதில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த காடுகள் அழிந்தன. ‘ரெயின் டீர்' என்ற மான் இனம் முழுவதுமாக அழிந்தது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டெட்ரிஃபைட் ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு அருகே பாரிஸ்கர்கிடாரப் என்றொரு பள்ளம் உள்ளது. அதன் ஆழம் 600 அடி. குறுக்களவு சுமார் 1000 மீட்டர். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று விழுந்த சுவடுதான் அந்தப் பள்ளம். இதுபோன்று ஏராளமான பள்ளங்களை பூமியில் விண்கற்கள் விழுந்து ஏற்படுத்தி உள்ளன. பூமியிலும் சந்திரனிலும் விண்கற்கள் விழுந்த இடம் பள்ளங்களாகக் காட்சியளிப்பதைப் பார்க்க முடிகிறதல்லவா?
நன்றி
பாலா பாரதி
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டெட்ரிஃபைட் ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு அருகே பாரிஸ்கர்கிடாரப் என்றொரு பள்ளம் உள்ளது. அதன் ஆழம் 600 அடி. குறுக்களவு சுமார் 1000 மீட்டர். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று விழுந்த சுவடுதான் அந்தப் பள்ளம். இதுபோன்று ஏராளமான பள்ளங்களை பூமியில் விண்கற்கள் விழுந்து ஏற்படுத்தி உள்ளன. பூமியிலும் சந்திரனிலும் விண்கற்கள் விழுந்த இடம் பள்ளங்களாகக் காட்சியளிப்பதைப் பார்க்க முடிகிறதல்லவா?
நன்றி
பாலா பாரதி










