Tuesday, 2 January 2024

வார நாட்களின் பெயர் எவ்வாறு பெறப்பட்டன?

             வார நாட்களான ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday எனத் தமிழில் உள்ள அதே பொருளுடனேயே அழைக்கப்படுகின்றன. இந்த ஏழு நாட்களும் எந்த வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான தெளிவான விளக்கம் எங்கும் இல்லை. சுமேரியர்களிடமிருந்து, கிரேக்கர்கள் கற்றனர். கிரேக்கர்களிடமிருந்து ரோமானியர் கற்றனர் எனப் பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. இதற்கான சரியான விளக்கம் கிடைக்காததால் இம்மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். தமிழர்களிடம் இதற்கான தெளிவான விளக்கம் உள்ளது. 1955 இல் முதல் பதிப்பாக வந்த 'சாதக அலங்காரம்' எனும் புத்தகத்தில் உள்ள பாடல்களுள் ஒன்றில் இதற்கான விளக்கம் உள்ளது. இந்நூலின் ஆசிரியர் திரு கீரனூர் நடராஜன். இப்பாடல் பதினேழாம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகளில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

                         "அருக்கன் புகர்புந்தி யிந்துண்

       மந்தனோ டந்தணன் சேய் 

இருக்குங் கடிகை யிரண்டரையா

       மிந்த ஓரைகளில்...."

                     (அருக்கன்-ஞாயிறு, புகர்-வெள்ளி, புந்தி-புதன், இந்து-திங்கள், துண்மந்தன்-சனி,             அந்தணன்-வியாழன், சேய்-செவ்வாய்)

     பொருள்:        ஒரு நாளை ஞாயிறு, வெள்ளி, புதன், திங்கள், சனி, வியாழன், செவ்வாய் ஆகிய ஏழு கோள்களும், இரண்டரை இரண்டரை நாழிகையாகத் தம்முள் மாறி மாறிப் பங்கிட்டுக் கொள்கின்றன.

                ஒரு நாள்      =   60 நாழிகை 

60 நாழிகை   =  24 ஓரை

ஒரு நாள்      = 24 ஓரை

 மேற்சொன்ன வரிசையில் இரண்டரை நாழிகைகள் அதாவது ஓர் ஓரையை (ஒரு மணி நேரம்) ஒவ்வொரு கோளும் எடுத்துக்கொள்ள, 24 ஓரைகள் முடிந்து 25 ஆவது ஓரை எந்தக் கோளில் வருகிறதோ அக்கோளின் பெயரால் அந்த நாள் அழைக்கப்படும். 


 1

ஞாயிறு

1

திங்கள்

1

செவ்வாய்

1

புதன்

1

வியாழன்

1

வெள்ளி

1

சனி

2

வெள்ளி

2

சனி

2

ஞாயிறு

2

திங்கள்

2

செவ்வாய்

2

புதன்

2

வியாழன்

3

புதன்

3

வியாழன்

3

வெள்ளி

3

சனி

3

ஞாயிறு

3

திங்கள்

3

செவ்வாய்

4

திங்கள்

4

செவ்வாய்

4

புதன்

4

வியாழன்

4

வெள்ளி

4

சனி

4

ஞாயிறு

5

சனி

5

ஞாயிறு

5

திங்கள்

5

செவ்வாய்

5

புதன்

5

வியாழன்

5

வெள்ளி

6

வியாழன்

6

வெள்ளி

6

சனி

6

ஞாயிறு

6

திங்கள்

6

செவ்வாய்

6

புதன்

7

செவ்வாய்

7

புதன்

7

வியாழன்

7

வெள்ளி

7

சனி

7

ஞாயிறு

7

திங்கள்

8

ஞாயிறு

8

திங்கள்

8

செவ்வாய்

8

புதன்

8

வியாழன்

8

வெள்ளி

8

சனி

9

வெள்ளி

9

சனி

9

ஞாயிறு

9

திங்கள்

9

செவ்வாய்

9

புதன்

9

வியாழன்

10

புதன்

10

வியாழன்

10

வெள்ளி

10

சனி

10

ஞாயிறு

10

திங்கள்

10

செவ்வாய்

11

திங்கள்

11

செவ்வாய்

11

புதன்

11

வியாழன்

11

வெள்ளி

11

சனி

11

ஞாயிறு

12

சனி

12

ஞாயிறு

12

திங்கள்

12

செவ்வாய்

12

புதன்

12

வியாழன்

12

வெள்ளி

13

வியாழன்

13

வெள்ளி

13

சனி

13

ஞாயிறு

13

திங்கள்

13

செவ்வாய்

13

புதன்

14

செவ்வாய்

14

புதன்

14

வியாழன்

14

வெள்ளி

14

சனி

14

ஞாயிறு

14

திங்கள்

15

ஞாயிறு

15

திங்கள்

15

செவ்வாய்

15

புதன்

15

வியாழன்

15

வெள்ளி

15

சனி

16

வெள்ளி

16

சனி

16

ஞாயிறு

16

திங்கள்

16

செவ்வாய்

16

புதன்

16

வியாழன்

17

புதன்

17

வியாழன்

17

வெள்ளி

17

சனி

17

ஞாயிறு

17

திங்கள்

17

செவ்வாய்

18

திங்கள்

18

செவ்வாய்

18

புதன்

18

வியாழன்

18

வெள்ளி

18

சனி

18

ஞாயிறு

19

சனி

19

ஞாயிறு

19

திங்கள்

19

செவ்வாய்

19

புதன்

19

வியாழன்

19

வெள்ளி

20

வியாழன்

20

வெள்ளி

20

சனி

20

ஞாயிறு

20

திங்கள்

20

செவ்வாய்

20

புதன்

21

செவ்வாய்

21

புதன்

21

வியாழன்

21

வெள்ளி

21

சனி

21

ஞாயிறு

21

திங்கள்

22

ஞாயிறு

22

திங்கள்

22

செவ்வாய்

22

புதன்

22

வியாழன்

22

வெள்ளி

22

சனி

23

வெள்ளி

23

சனி

23

ஞாயிறு

23

திங்கள்

23

செவ்வாய்

23

புதன்

23

வியாழன்

24

புதன்

24

வியாழன்

24

வெள்ளி

24

சனி

24

ஞாயிறு

24

திங்கள்

24

செவ்வாய்

     இதன்படி பார்த்தால் முதல் நாளின் பெயர் 'ஞாயிறு' என எடுத்துக் கொள்வோம் இருபத்து நான்கு ஓரைகள் முடிந்து இருபத்து ஐந்தாவது ஓரையாக அதாவது அடுத்த சுற்றின் முதல் ஓரையாகத் திங்கள் வருகிறது எனவே இரண்டாம் நாளின் பெயர் 'திங்கள்'. இத்திங்கள் முதல் ஓரையாகக் கொள்ளப்பட்டு மீண்டும் 24 ஓரைகளைக் கடந்தால் அடுத்து வரும் ஓரை ‘செவ்வாய்'. இதுவே மூன்றாம் நாளின் பெயர். இச்செவ்வாயை முதல் ஓரையாகக் கொண்டு மீண்டும் இருபத்து நான்கு ஓரைகளைக் கடந்தால் அடுத்த ஓரையாக 'புதன்' வருகிறது. எனவே நான்காம் நாளின் பெயர் 'புதன்'. இவ்வாறாக ‘வியாழன்` ஐந்தாவது நாளாகவும், 'வெள்ளி' ஆறாவது நாளாகவும், 'சனி' ஏழாவது நாளாகவும் வருகிறது. 

 

                                                                                                                             - பாலா பாரதி


7 comments:

  1. நல்ல விளக்கம்.Genesis எண்ணம் ஆதியாகமத்தில் முதல் நாள் இரண்டாம் நாள் என ஆறு நாட்களும் ஏழாவது நாள் ஓய்வு நாள் என்றும் தான் கூறப்பட்டு இருக்கிறது தவிர கிழமைகள் இல்லை என்பது நினைவில் வருகிறது. ஆயினும் மிகப் பிற்காலத்திய சோதிட நூல்களை ஆதாரமாகக் காட்டுவது

    ReplyDelete
    Replies
    1. சோதிட நூல் பிற்காலமென்றாலும் அதிலுள்ள வானியல் குறிப்பு பழமையானதாகக் கருதுகிறேன்.

      Delete
  2. சற்று நெருடலாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
  3. அருமையான விளக்கம். ஆங்கிலத்தில் எழுதி உலகளவில் கொண்டுசெல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. செய்துவருகிறோம்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete