Thursday, 25 June 2026

தமிழர் பண்பாட்டில் ஓரையான் உடுக்கணத்தின் பதிவுகள்

இரவு வானில் வைரங்களாக மின்னும்விண்மீன்கள் பார்ப்பவர்களைக் கவரும் உடுகணங்களில் முதன்மையானது ஓரையான் உடுகணம். இவற்றை எளிதில் அடையாளம் காண அவற்றைப் பலதொகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குக் கற்பனையான வடிவம் கொடுத்து உடுக்கணங்களாக(Constellation) அறிகிறோம். உலக வானியல் கழகம் (IAU) எண்பத்து எட்டு உடுக்கணங்களைஅங்கீகரித்துள்ளது. அவற்றில் சூரியப் பாதையில் பன்னிரண்டு  உடுக்கணங்கள் இயங்குகின்றன. அவற்றையே இராசிகள்(Zodiacal Constellations) என்கிறோம். உடுக்கணங்களில் சில பெரிதாகவும்,பெயருக்கேற்றவாறான தோற்றத்திலும் இருப்பவை. இவற்றில் ஓரையானுக்குச் சிறப்பிடம்உண்டு. வான் நோக்குபவர்களுக்கு ஆரம்பத்தில் எளிதாகக் கண்டுக்கொள்ளக் கூடியதும்,பார்ப்பவர்களின் கருத்தைக் கவரக் கூடியதுமான உடுக்கணம் ஓரையான் ஆகும். குளிர்காலவானை அலங்கரிக்கும் இவ்வுடுக்கணத்தின் வேட்டைக்காரன் தோற்றமும், பொலிவுமிக்கதிருவாதிரை (Betlegeuse) ரைஜல் (Rigel) ஆகிய முதல்தர பொலிவெண் கொண்ட விண்மீன்களும்பார்ப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டக் கூடியவைகளாக உள்ளன. 
கிரேக்கர்கள் இவ்வுடுக்கணத்தைவேட்டைக்காரனாகப் பார்த்தார்கள். வேட்டைக்காரன் ஒருவன் தனது வலக்கையில்தடியொன்றைத் தூக்கியவாறும் இடக்கையில் கேடயத்தை ஏந்தியவாறும் நின்றுள்ள தோற்றத்தைவானில் எளிதில் காணலாம். வரிசையாக இருக்கும் மூன்று விண்மீன்கள் வேட்டைக்காரனின்இடுப்புப் பகுதியைச் சுட்டும். இடுப்பிலிருந்து கத்தி தொங்கிக்கொண்டிருப்பதைப்போன்று மங்கலான விண்மீன்கள் புகைபோல் காட்சியளிக்கும். இதுவே புகழ்பெற்ற ஓரையான்வான்முகில் (Orion Nebula-M42) ஆகும்.  ஓரையானைக் கொண்டு மற்ற விண்மீன்களையும்உடுக்கணங்களையும் அடையாளம் காண முடிவதால் இது வானில் மற்ற உடுக்கணங்களைஅறிந்துகொள்ள பயன்படுகிறது. ஓரையானின் பெல்லாட்ரிக்சையும், பீட்டில்ஜுஸையும்இணைத்து அக்கோட்டை நீட்டினால் அக்கோடு புரோசியானை அடையும். அவனது இடுப்பிலுள்ளமூன்று விண்மீன்களையும் இணைத்து ஒரு கோடு வரைந்தால் அக்கோட்டின் இடப்புறம்'சிரியஸை' நோக்கியும், வலப்புறம் 'அல்டிபெரானை' நோக்கியும் இருக்கும்.இடுப்பிலுள்ள மூன்று விண்மீன்களில் வலது கோடியிலுள்ள விண்மீனிலிருந்து ‘ரைஜல்’ வழியே கோடு வரைந்தால் அக்கோடு ‘அக்கிர்னர்' என்றவிண்மீனையும், இடக்கோடியிலுள்ள விண்மீனிலிருந்து 'சைப்' வழியே கோடு வரைந்தால்அக்கோடு 'கேனபஸ்' எனும் விண்மீனையும் அடையும். இடுப்புக் கச்சையிலிருந்து‘பெல்லாட்ரிக்ஸ்' வழியே செல்லும் கோடு ஆரைகா உடுக்கணத்தில் 'காப்பெல்லாவையும்'இடுப்புக் கச்சையிலிருந்து 'பீட்டில்ஜுஸ்' வழியே செல்லும் கோடு 'கேஸ்டர்''பொலாக்ஸை'யும் அடையும். இவ்வாறு வானின் மற்ற உடுக்கணங்களையும், விண்மீன்களையும்அடையாளம் காண உதவுவதால் ஓரையான் வானின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. கிரேக்கப்புராணக்கதைகளில் ஓரையானுக்கு முக்கியமான இடமுண்டு.
நடராஜர் கிரேக்கக் கதைகளில் ஓரையான் ஒருவேட்டைக்காரனாகக் கூறப்பட்டுள்ள நிலையில் தமிழ் மரபில் ஓரையான் பல்வேறுகடவுளர்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நடராஜர் ஓரையான் உடுக்கணத்தின்தோற்றத்திலிருந்து சிவனின் ஒரு வடிவமான நடராஜருக்கு உருவத்தைக் கொடுத்தனர்.  இரு தோள்களுக்கு இருவிண்மீன்கள், இரு கால்களுக்கு இருவிண்மீன்கள், இடுப்பில் மூன்று விண்மீன்கள் ஆக ஏழு விண்மீன்களும் சேர்ந்து ஒருஉடுக்கை வடிவத்தை ஏற்படுத்தும். மற்ற விண்மீன்களுடன் சேர்த்துப் பார்க்கும்போதுவலக்காலை தூக்கியபடி நடனமாடும் காட்சி தெரியும். இதையே சிவனின் பிரபஞ்ச நடனம்(Cosmid Dance) என்பார்கள். இடத் தோளில் தெரியும் சிவப்பு நிற விண்மீன் திருவாதிரை(Betlegeuse) ஆகும். 'திருவாதிரை' வடமொழியில் 'ஆருத்ரா' என அழைக்கப்படுகிறது.ஓரையான் வானில் உயர்ந்து காணப்படும் மார்கழி மாதங்களில் சிவாலயங்களில் ஆருத்ராநடனம் எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நடராஜரைச் சுற்றிக் காணப்படும் திருவாசிகள்ஓரையான் உடுக்கணத்தைச் சுற்றியுள்ள விண்மீன்களாகும். நடராஜரின் இடதுகாலுக்குக்கீழே சிறிய மனித உருவம் இருக்கும். இதை முயலகன் என்ற அரக்கன் என்று கூறுவார்கள்.முயலகன் என்ற அகந்தைக் கொண்ட அரக்கனைச் சிவன் அடக்கியதாகக் கூறுவார்கள். இங்கே முயல் என்ற பெயர் வரக்காரணம்என்ன? ஓரையான் உடுக்கணத்திற்குக் கீழேசிறிய உடுக்கணம் ஒன்று உள்ளது. அந்த உடுக்கணத்தின் பெயர் முயல் (Lepus) ஆகும்.ஓரையான் உடுக்கணம் சிவனாகக் கொள்ளப்பட்டதால் அதற்குக் கீழே உள்ள முயல் உடுக்கணம்முயலகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. சிவனுக்கு உடுக்கையும் இவ்வுடுக்கணத்தின்உடுக்கை வடிவத்திலிருந்து கொடுக்கப்பட்டதுதான்.  
காலபைரவர்   சிவனின் மற்றொரு உருவமான காலபைரவரும் ஓரையான் உடுக்கணத்தின் தோற்றத்திலிருந்து உள்வாங்கப்பட்டதுதான்.காலபைரவரின் தோற்றம் நின்றபடியிருக்கும் மனித உருவமும், கீழே காலுக்கருகில் நாய்ஒன்றுடன் இருக்கும். நாய் அங்கு வரக்காரணம் என்ன? ஓரையான் உடுக்கணத்தின் அருகேகிழக்குத் திசையில் உள்ள ஒரு உடுக்கணம் பெருநாய் உடுக்கணம் (Canis MajorConstellation). பெயருக்கு ஏற்றவாறு நாய் ஒன்றின் வடிவிலேயே காணப்படும்இவ்வுடுக்கணத்தில்தான் முதல் பொலிவுமிக்க விண்மீனான சிரியஸ் (Cirius) உள்ளது.சிரியஸ் நாயின் தலையாகவும் மற்ற விண்மீன்கள் முன்னங்கால்கள், பின்னங்கால்களாகவும்பார்ப்பதற்கு நாய் நடந்து வருவதைப் போலவே காட்சியளிக்கும். ஓரையான் நாயுடன்செல்வதுபோலவும் காலுக்கருகே முயல் இருப்பதாலும் கிரேக்கர்கள் ஓரையானைவேட்டைக்காரனாக உருவகப்படுத்தினார்கள். தமிழர்களோ ஓரையானுக்கு அருகே இருக்கும்நாயுடன் சேர்த்துக் காலபைரவர் என்ற உருவத்தைச் சிவனுக்கு வழங்கினர். பைரவர்என்றால் நாயைக் குறிக்கும் சொல் 'கால' என்ற முன்னொட்டு ஏன் வரவேண்டும்? ஓரை என்பதுகாலத்தை அளக்கும் அலகுகளுள் ஒன்று.  அது காலத்தைக் குறிக்கும் சொல்லாதலால் காலபைரவர்என்று பெயர் உண்டாகியிருக்கிறது. 
கங்காதரர்  கங்காதேவியை தனது தலையில் கொண்டசிவனின் ஒரு உருவமான கங்காதரரைப் பல கோயில்களில் காணலாம். காஞ்சிபுரம் கைலாசநாதர்கோயில், திருச்சி மலைக்கோட்டையிலுள்ள மேல்குடைவரைப் பல்லவர் கோயில் ஆகிய இடங்களில்கங்காதரரின் சிற்பங்களைக் காணலாம். கங்காதரரின் காலுக்குக் கீழ் இருக்கும்முயலாரும் பைரவரும் ஏன் உள்ளனர் என நமக்குத் தெரியும். கங்காதரரின் இடப்புறத்தில்சற்று மேலே நாய் ஒன்று காட்டப்பட்டிருக்கும். அந்த நாய் அங்குக் காட்டப்பட வானில்தோன்றும் உடுக்கணங்கள்தான் காரணம். ஓரையான் உடுக்கணத்திற்கு கிழக்கே சற்றுத் தள்ளிஒரு சிறிய உடுக்கணம் நாயின் வடிவில் உள்ளது. இது சிறிய நாய் உடுக்கணம் (CanisMinor Constellation) ஆகும். இதில் உள்ள பொலிவுமிக்க விண்மீன் புரோசியான்(Prociyan) இந்தச் சிறிய நாய் உடுக்கணமே கங்காதரர் சிற்பத்தில் மேலே நாயாகக்காட்டப்பட்டுள்ளது. கங்காதரர் என்றால் கங்காதேவியை தலையில் கொண்டவர் என்று பொருள்.சிவன் கங்காதேவியைஏன் தலையில் கொண்டுள்ளார்? கங்கா தேவி யார்? அவர் ஏன் சிவனின்தலைக்கு மேலே காட்டப்பட்டுள்ளார்? நமது பூமி சூரியக் குடும்பத்தில்இயங்குகிறது. நமது சூரியக் குடும்பம் பால்வீதி (Milkyway Galaxy) எனும்  அண்டத்தில் இயங்குகிறது. சுருள் வடிவிலான பால்வெளிஅண்டத்தினுள் நாம் இருக்கிறோம். அதனால் அதன் முழுத்தோற்றமான சுருள் வடிவைபூமியிலிருந்துக் காண இயலாது. ஆனால், அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காணலாம்.இது பார்ப்பதற்கு அற்புதமான காட்சியாகும். புகைபோல எண்ணற்ற விண்மீன்களுடன்தெற்கிலிருந்து வடக்காக ஒரு மலைப்பாம்பு படுத்திருப்பதுபோலக் காட்சியளிக்கும்.இதன் புகைபோன்ற தோற்றத்தை மேலை நாட்டினர் வானில் பால் கொட்டிக்கிடப்பதைப் போலஇருப்பதாக எண்ணி பால்வீதி (Milkyway) எனப் பெயரிட்டனர். தமிழர்களோவெண்ணிறக்காட்சியை வானில் கங்கை ஆறு ஓடுவதைப்போல கற்பனைச் செய்தார்கள். நமது பூமிஒரு சுருள் வடிவ அண்டத்தினுள் உள்ளதால் அந்த அண்டமான பால்வீதியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இருபுறங்களிலில் இருந்தும் பார்க்கலாம். பூமியிலிருந்து பார்க்கும்போதுபால்வீதி இரு நிலைகளில் காட்சியளிக்கும். ஒன்று குளிர்காலத் தோற்றம் மற்றதுகோடைக்காலத் தோற்றம். இவற்றில் கோடைக் காலத்தில் தோன்றும் தோற்றம் மிகவும்பொலிவானது. குளிர்காலத் தோற்றம் சற்றுப் பொலிவு குறைவானது. பால்வீதியின்குளிர்காலத் தோற்றம் ஓரையானின் தலைக்கு மேலே செல்கிறது. ஓரையான் சிவனாகவும்,பால்வீதி கங்காதேவியாகவும் கொள்ளப்பட்டிருப்பதாலும், பால்வீதி ஓரையான் தலைக்குமேலே செல்வதாலும், சிவன் கங்காதேவியை தனது முடியில் சூடியுள்ளதாகஉள்வாங்கப்பட்டுள்ளது.
முக்கண்ணன்  சிவனுக்கு நெற்றியில் ஒரு கண்உள்ளதால் அவனுக்கு முக்கண்ணன் என்ற பெயர் சூட்டப்பட்டது. ஏன் நெற்றியில் ஒரு கண்உள்ளதாகக் கூறப்பட்டது? ஓரையான் உடுக்கணத்தில் தலைப்பகுதியில் உள்ள விண்மீன்மிருகசீரிடம் (Meissa) தமிழில் மான்றலை என அழைக்கப்படும். இந்த விண்மீனை உற்றுநோக்கினால் மூன்று விண்மீன்கள் உள்ளது தெரியும். இம்மூன்று விண்மீன்களும்தேங்காயில் உள்ள மூன்று கண்கள் போல இருக்கும் என்பது "மான்றலை மூன்றும் தேங்காய்க்கனிபேர் ஆன்ற சிங்கத்தைந்தேகாலே....."  என்ற பாடலில் கூறப்பட்டுள்ளது.மேலும், இப்பாடலிலிருந்து இது உச்சியில் இருக்கும்போது சிங்கராசி உதித்து ஐந்தேகால் நாழிகை ஆகியிருக்கும் என்று தெரிகிறது. சூரிய வீதியில் இயங்கும்உடுக்கணங்களில் பன்னிரண்டு உடுக்கணங்கள் இராசிகள் எனக் கூறப்படுகின்றன. இந்தப்பன்னிரண்டு இராசிகளில் ஓரையான் இடம்பெறவில்லை. ஆனால், மிருகசீரிடம் ஓரையான்உடுக்கணத்தில் இருந்தாலும் சாதகம் கணிக்கும்போது அது காளை (ரிஷப) இராசியில் உள்ளவிண்மீனாகக் கருதப்படுகிறது. மேற்கண்டவற்றிலிருந்து வானை உற்று நோக்கி உடுக்கணங்களிலிருந்து தங்களின் கடவுளர்களுக்கான உருவங்களைக் கொடுக்கத் தங்களின்வானியல் அறிவைப் பயன்படுத்திக் கொண்டனர் எனக் கூறலாம்.
உமையொருபாகன் / அர்த்த நாரீஸ்வரர் சிவன் தனது இனையர் உமையாளுக்கு தனது உடலில் பத்தியை கொடுத்து உமையொருபாகனாக விளங்குவதாக புராணக் கதைகளில் வருகிறது. இதுவும் ஒரையானின் வான் தோற்றத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான். உடுக்கை வடிவத்தை இருபாகங்களாக பிரித்தால் இரு முக்கோணங்கள் கிடைக்கும். ஒன்று மேல்நோக்கியும் மற்றது கீழ்நோகியும் இருக்கும். மேல்நோக்கிய முக்கோணம் ஆணையும், கீழ்நோக்கிய முக்கோணம் பெண்ணையும் குறிப்பது குறியீட்டு மரபாகும். இதிலிருந்து உருவாக்கப்பட்ட புராணக் கதைதான் அர்த்த நாரீஸ்வரர்.

No comments:

Post a Comment