Tuesday, 28 August 2018

நிழலில்லா நாள் - Zero Shadow Day

இன்று (25-08-2018) திருச்சியில் நமதுப்பள்ளி உள்ள பகுதியில் 'நிழலில்லா நாள்' (Zero Shadow Day). நமது மாணவர்கள், இன்று சென்னையில் விழும் நிழலின் நீளத்தைகொண்டும், எளியக் கணக்கீடுகளைக்கொண்டும் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார்கள்.
எரட்டோஸ்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினார். அதே முறையில் பூமியின் சுற்றளவைக் கணக்கிடப்பட்டது.
எவ்வாறு கணக்கிட்டோம்?
திருச்சியில் மதியம் 12:17 மணிக்கு நிழல் பூஜ்ஜியமான நேரத்தில் சென்னையில் நிழலின் நீளம் பூஜ்ஜியமாக இருக்காது, ஏனெனில் இரண்டு ஊர்களும் வெவ்வேறு அட்சரேகையில் இருக்கின்றன. சென்னையிலுள்ள நமது நண்பர் சிவகுமார் அவர்கள் மதியம் சரியாக 12:17 மணிக்கு 137.2 செ.மீ உயரமுள்ள குச்சி ஒன்றின் நிழலின் நீளத்தை 6.8 செ.மீ என அளந்து கூறினார்.
tan¢ = 6.8 / 137.2 = 0.0495
tan¢ = 0.0495 > ¢ = 2.9 °
சென்னையில் நண்பர் இருந்த இடத்திற்கும் நமக்கும் உள்ளதொலைவை 320 கி.மீ என கூகுளில் அறிந்துக்கொண்டோம்.
2.9. 320
360. ?
2.9x = 320 x 360 > x = 39,724 கி.மீ
பூமியின் சுற்றளவு சரியான விடை = 40,075 கி.மீ.
- பாலா பாரதி







No comments:

Post a Comment